முகப்பு /தொழில்நுட்பம் /

காதலர் தினத்தை கூடுதல் அழகாக்கிய கூகுளின் ’டூடுல்’

காதலர் தினத்தை கூடுதல் அழகாக்கிய கூகுளின் ’டூடுல்’

X
கூகுள்

கூகுள் டூடுள்

Valentine's day | உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

ஒவ்வொரு நாளும் கூகுள் தனது தேடுதளத்தில் அந்தந்த நாளின் சிறப்பை எடுத்துக் கூறும் விதமாக டூடுலை மாற்றி அமைக்கும். அந்த வகையில் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தனது டூடுலை அழகான இரண்டு தண்ணீர் துளிகள் ஒன்றிணைந்து ஒரு துளியாக சங்கமித்தது போல டூடுல் அமைந்துள்ளது.

மேலும் காதலர் தினம் உருவான வரலாற்றையும் அழகாக எடுத்துரைத்துள்ளது. மழையோ, வெயிலோ நீ என்னுடையவள் தானே என்று தொடங்கும் பதிவில் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் அன்பையும் காதலையும் கொண்டாடும் நாள் தான் இந்த காதலர் தினம்.

காதலர் தினத்தை கொண்டாடிய கூகுளின் ”டூடுல்”

இந்த நாளில் தன்னுடைய இணையருக்கு வாழ்த்து அட்டைகள், பரிசுகள் ஆகியவை பரிமாறப்படும். 17-ம் நூற்றாண்டிலேயே காதலர் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பறவைகள் தங்கள் இணையை தேடி கண்டு கொள்ளும். இதை பார்த்து தான் ஐரோப்பியர்கள் காதலர் தினத்தை கொண்டாட தொடங்கினர் என்று தெரிவிக்கிறது கூகுள்.

அதன் பின்னர் வர்த்தக நோக்கத்திற்காக இந்த தினம் உலகம் முழுவதும் பரவி தற்போது ஒரு வாரமே காதல் வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் காதலர் தினத்தையொட்டி கூகுள் வெளியிட்ட அழகான டூடுல் தற்போது இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பேசு பொருள் ஆகியுள்ளது.

First published:

Tags: Valentine's day