முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஜி மெயில் யூசர்களுக்கு எச்சரிக்கை... கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும் என கூகுள் அறிவிப்பு..!

ஜி மெயில் யூசர்களுக்கு எச்சரிக்கை... கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும் என கூகுள் அறிவிப்பு..!

கூகுள்

கூகுள்

Google | கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.

  • Last Updated :
  • internationa, IndiagooglegooglegoogleCaliforniaCaliforniaCalifornia

கூகுள் நிறுவனத்திற்கு உட்பட்ட பல்வேறு ஜி மெயில் கணக்குகள் பல ஆண்டுகளாக பயனற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனை சீர் செய்யும் நோக்கில், 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஜி மெயில் கணக்குகள் நீக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பயனர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 24 மாதத்திற்கு ஒரு முறையேனும் லாக்-இன் செய்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் முற்றிலும் நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளில் இருந்து தரவுகள் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டன. அதாவது கூகுளில் சேமித்து வைத்திருந்த புகைப்படங்கள், கோப்புகள் நீக்கப்பட்டு வந்தன.

மேலும் படிக்க... ஒரே வாட்ஸ் அப் கணக்கை 2 போன்களில் பயன்படுத்துவது எப்படி தெரியுமா..?

top videos

    ஆனால், தற்போது கூகுள் கணக்குகளே மொத்தமாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல யூடியூப் பக்கங்களும் நீக்கம் செய்யப்படும். இந்த ஆண்டின் இறுதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    First published:

    Tags: Google