முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஜிமெயில் மற்றும் யூடியூப் கணக்குகளை நீக்க போவதாக கூகுள் அறிவிப்பு!

ஜிமெயில் மற்றும் யூடியூப் கணக்குகளை நீக்க போவதாக கூகுள் அறிவிப்பு!

கூகுள்

கூகுள்

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு மேல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் மற்றும் யுடியூப் கணக்குகள் அனைத்தையும் நீக்க போவதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • Last Updated :
 • Tamil Nadu, India

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு மேல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் மற்றும் யுடியூப் கணக்குகள் அனைத்தையும் நீக்க போவதாக அதில் குறிப்பிட்டுள்ளது. யூசர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியும், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கணக்குகளில் உள்ள தகவல்கள் கசிவதன் ஆபத்தை கணக்கில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி 2023 டிசம்பர்-ல் இருந்து இந்த புதிய கொள்கை அமலுக்கு வரும் என்று கூகுள் அறிவித்துள்ளது. மேலும் ஆக்டிவாக இல்லாத கணக்குகளில் உள்ள அனைத்து தகவல்களும் பதிவுகளும் நீக்கப்படும். ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர், யுடியூப் மற்றும் கூகுள் ஃபோட்டோஸ் போன்ற அனைத்து விதமான பிளாட்பார்ம்களிலிருந்தும் யூசர்களின் தகவல்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்.

மேலும் இதே போல ஒரு தகவலை 2020-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஆக்டிவாக இல்லாத கணக்குகளில் இருக்கும் தகவல்கள் மட்டுமே நீக்கப்படும். ஆனால் அந்த கணக்குகள் நீக்கப்படாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூகுள் ஏன் ஆக்டிவாக இல்லாத கணக்குகளை நீக்க வேண்டும்?

தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதன் பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏனெனில் ஒரு கணக்கானது நீண்ட நாட்களாக ஆக்டிவாக இல்லாத போது அதன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். இதனால் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் ஆக்ட்டிவாக இல்லாத கணக்குகளில் பெரும்பாலும் பழைய அல்லது பல்வேறு முறை பயன்படுத்தப்பட்ட கடவுச் சொற்களே இருக்கும். இதனால் தகவல்கள் கசிவதற்கு வாய்ப்புகள் உண்டு.

யூசர்களின் கணக்குகளை பாதுகாப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கூகுள் தன்னகத்தே கொண்டிருந்தாலும், ஒரு கணக்கானது நீண்ட நாட்களுக்கு ஆக்டிவாக இல்லாத பட்சத்தில், அதனால் சில ஆபத்துக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கணக்குகளில் பழைய கடவுச்சொற்களே உள்ளீடு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் இரு காரணி அங்கீகார முறையில் கணக்குகள் பாதுகாக்கப்பட்டு இருக்க வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக அந்த கணக்குகள் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில் அதனால் அந்தக் கணக்கின் உரிமையாளருக்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுளின் ஆய்வின்படி இவ்வாறு கைவிடப்பட்ட கணக்குகள் தான் பெரும்பாலும் தற்போது அதிகரித்து வரும் இணைய தாக்குதல்களுக்கு அதிகம் பலியாகின்றன. ஆக்டிவாக இருக்கும் கணக்குகளை காட்டிலும் இதுபோல பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகள் மிக எளிதாக இணைய தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன.

ஆக்டிவாக உள்ள கணக்குகளை காட்டிலும் இவ்வாறு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளில் பெரும்பாலும் இரு காரணி அங்கீகார முறையானது பயன்படுத்தப்பட்டு இருக்காது. இதனால் ஹேக்கர்களுக்கு இவை மிகவும் எளிய குறியாக மாறிவிடுகின்றன. மேலும் சைபர் குற்றங்களை நிகழ்த்துவதற்கும் இதுபோல கைவிடப்பட்ட கணக்குகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தக் கொள்கையானது கூகுள் கணக்கை பயன்படுத்தும் தனிப்பட்ட பயனாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் வணிக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கணக்குகள் இவற்றிற்குள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கணக்குகளை நீக்குவதற்கு முன்னர் அந்தந்த கணக்குகளுக்கு இதைப் பற்றிய அறிவிப்பானது அனுப்பப்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு கணக்கை நீக்குவதற்கு முன் பல்வேறு எச்சரிக்கைகள் அந்த கணக்கிற்கு அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படும் எந்தவித மாற்றமும் தெரியவில்லை எனில் அந்த கணக்குகள் நீக்கப்படும்.

ஒருவேளை உங்களிடமும் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் இருந்து அவற்றை நீங்கள் மீண்டும் புதுப்பிக்க விரும்பினால் எளிதாக லாகின் செய்வதன் மூலமே உங்களால் அவற்றை புதுப்பித்து விட முடியும்.

 • ஈமெயில்களை அனுப்புவது அல்லது படிப்பது
 • கூகுள் டிரைவை பயன்படுத்துவது
 • யுடியூப் வீடியோக்களை பார்ப்பது
 • கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வது
 • கூகுள் சர்ச் பயன்படுத்துவது
 • மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது சேவைகளில் கூகுள் கணக்கை பயன்படுத்துவது

ஆகியவற்றை செய்வதன் மூலம் உங்களது கூகுள் கணக்கு நீக்கப்படுவதை உங்களால் தவிர்க்க முடியும். மேலும் அந்த யூசருக்கு ஏற்கனவே கூகுள் சப்ஸ்கிரிப்ஷன் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் கூகுள் அந்த கணக்குகளை நீக்காது.

top videos

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  First published:

  Tags: Google, Google play Store, Youtube