முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இனி கூகுளே உங்களுக்காக மெயில் டைப் செய்து விடும்..வருகிறது புதிய வசதி!

இனி கூகுளே உங்களுக்காக மெயில் டைப் செய்து விடும்..வருகிறது புதிய வசதி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நமக்கு வந்த மெயிலில் இருக்கும் முக்கியமான விபரங்களை எடுத்துக்கொண்டு நமக்கான ரிப்ளை மெயிலை ‘ஹெல்ப் மி ரைட்’ தானாகவே எழுதி விடும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Chatgpt என்ற AI அறிமுகமாகி உலகையே தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அதனைத்தொடர்ந்து அதற்குப் போட்டியாகக் கூகுள் நிறுவனமும் AI அம்சத்தைக் கொண்டு வரும் என்று அறிவித்திருந்தது. தற்போது அதனைக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிமுகம் செய்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய இணையதள நிறுவனமான கூகுள் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. தனது பயனர்களுக்கு தங்கள் புராடக்ட் மேல் சலிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக புதுப்புது அப்டேட்களை வழங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் விரைவில் அறிமுகம் ஆக உள்ளது ஹெல்ப் மி ரைட் என்ற AI வசதி. ஹெல்ப் மி ரைட் என்றால் என்ன என்பதைக் குறித்து இங்குத் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த புதன்கிழமை கூகுள் I/O-2023 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் வரும் காலத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தை எப்படி எல்லாம் பயன்படப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுச் சோதனையில் இருக்கும் ஒரு அம்சத்தைப் பற்றிக் கூறினார் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. அது தான் ’ஹெல்ப் மி ரைட்’ அம்சம். AI உதவியுடன் இந்த அம்சம் செயல்படும். இது நமது வேலைகளை மிகவும் சுலபமாக்கிவிடும்.

உதாரணத்திற்கு, நீங்கள் பயணம் செய்ய இருந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கான வவுச்சருடன் உங்களுக்கு ஒரு இ-மெயில் வருகிறது. அதற்கு நீங்கள் பதில் மெயில் அனுப்ப வேண்டும். விமான நிறுவனம் உங்களுக்கு அளித்திருக்கும் சலுகைக்கு மாறாக வேறு ஒன்று விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு வந்த இ-மெயிலை மேற்கோள் காட்டி, உங்கள் விருப்பத்தையும் பதிவு செய்தால் போதும். உங்கள் விருப்பத்தோடு உங்களுக்கான பதில் மெயிலை ஹெல்ப் மி ரைட்-டே எழுதி விடும்.

Also Read : கூகுள் முதன்முறையாக அறிமுகப்படுத்திய ஃபோல்டபுள் போன்... விரைவில் இந்தியாவில்...

மேற்கோள் காட்டப்பட்ட மெயிலில் இருந்து உங்கள் டிக்கெட் விபரங்கள், பயண தேதி, நேரம், ரத்து செய்யப்பட்டதற்கான காரணம், நிறுவனம் வழங்கிய சலுகை, அதற்குப் பதிலாக உங்கள் விருப்பம் உள்ளிட்ட விபரங்களைத் தானே அமைத்து முறையான பதில் மெயிலை சில நொடிகளில் ஹெல்ப் மி ரைட் எழுதி விடும்.

top videos

    ஏற்கனவே ஸ்மார்ட் ரிப்ளை, ஸ்மார்ட் கம்போஸ் உள்ளிட்ட வசதிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் இந்த புதிய அம்சம் இப்போது சோதனை அளவில் இருப்பதாகவும், ஜூன் மாதம் இந்த வசதி ஜி- மெயில் பயனர்களுக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    First published:

    Tags: Artificial Intelligence, Google