முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / “தொழிலாளர்களின் குரல் பரிசீலிக்கப்படவில்லை” - சுந்தர் பிச்சைக்கு Open Letter எழுதிய கூகுள் ஊழியர்கள்..!

“தொழிலாளர்களின் குரல் பரிசீலிக்கப்படவில்லை” - சுந்தர் பிச்சைக்கு Open Letter எழுதிய கூகுள் ஊழியர்கள்..!

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இணைந்து சுந்தர் பிச்சைக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய வீழ்ச்சியின் காரணமாக  செலவினங்களைக் குறைக்க கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களில் 6% பேரை நீக்குவதாக ஜனவரி மாதம் அறிவித்தது. ஒரே இரவில் பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவதாக  மெயில் அனுப்பப்பட்டது.

சில கூகுள் தொழிலாளர்கள், குறிப்பாக அமெரிக்காவில் இருந்தவர்கள் , உடனடியாக வேலை இழந்தாலும். வலுவான தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் உள்ள ஐரோப்பிய நாடுகளில் இந்த செயல்முறை மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் நிருவனத்தில் பணியாற்றிய சில குறிப்பிட்ட பணியாளர்கள் மட்டுமே நீக்கப்பட்டனர்.

இதையும் படிங்க; காலை உணவுக்கு ராகி அடை... இப்படி ஈசியா செய்து சாப்பிட்டால் உடலுக்கும் ஆரோக்கியம்..!

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இணைந்து சுந்தர் பிச்சைக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில் புதிய ஆட்கள் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்துவது, வேலை காலியிடங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, கட்டாய பணி நீக்கங்களுக்கு முன் தன்னார்வ பணிவிலகலை கோருவது உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

அது மட்டும் இல்லாமல் கூகுள் பணியாளர்களுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்ள வழங்கப்படும் விடுப்புகள் பற்றியும் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர், போர் அச்சம், கலவரம் போன்ற சூழ்நிலை உள்ள நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்வதைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபாபெட் தனது பணியாளர்களைக் குறைக்கும் முடிவின் தாக்கங்கள் உலகளாவியவை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "எங்கும் தொழிலாளர்களின் குரல்கள் போதுமான அளவு கருதப்படவில்லை. மேலும் தொழிலாளர்களாகிய நாங்கள் தனியாக இருப்பதை விட ஒன்றாக வலுவாக இருக்கிறோம் என்பதை அறிவோம் என்றும் எழுதியுள்ளனர்.

First published:

Tags: Google, Sundar pichai