முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ் அப் உஷார்.. இந்த நம்பரில் அழைப்பு வந்தால் எடுக்காதீங்க.. தேடி வரும் புது மோசடி!

வாட்ஸ் அப் உஷார்.. இந்த நம்பரில் அழைப்பு வந்தால் எடுக்காதீங்க.. தேடி வரும் புது மோசடி!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

+84, +62, +60, என்று ஆரம்பிக்கும் எண்களிலிருந்து உங்களுக்கு whatsapp கால் வருகிறதா? தயவுசெய்து அதை எடுத்து விடாதீர்கள். அது உங்களை மோசடி செய்வதற்கான ஸ்பேம் கால்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

+84, +62, +60, என்று ஆரம்பிக்கும் எண்களிலிருந்து உங்களுக்கு whatsapp கால் வருகிறதா? தயவுசெய்து அதை எடுத்து விடாதீர்கள். அது உங்களை மோசடி செய்வதற்கான ஸ்பேம் கால். அடிக்கடி வாட்சப் பற்றி ஏதாவது செய்திகள் வெளியாவது வழக்கம்தான். ஆனால் இப்போது வாட்ஸ்அப் சார்ந்த புதிய மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக வாட்சப் மூலம் மக்களை அணுகி அவர்களை மோசடி செய்து அவர்களிடம் இருந்து பணத்தை மோசடிக்கார்கள் பறித்தனர்.

தற்போதைய நிலவரப்படி, 2 பில்லியன் மக்கள் ஆக்டிவாக வாட்ஸப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே இது பல மோசடிக்காரர்களின் டார்கெட் ஆக மாறிவிட்டது. +84, +62, +60, மற்றும் பல போன்ற சர்வதேச எண்களில் ஆரம்பிக்கும் தெரியாத நபர்களிடமிருந்து வாட்சப் கால்களை பெறுவதாக பலர் டிவிட்டரில் புகார் செய்து வருகின்றனர். மலேசியா, கென்யா, வியட்நாம், எத்தியோப்பியா போன்ற நாடுகளின் ஐஎஸ்டி குறியீட்டுகளை கொண்ட எண்களிலிருந்து பல வாட்சப் பயனாளர்களுக்கு போன் கால்கள் வருகின்றது.

இதுவரை எதற்காக இதுபோன்ற கால்கள் வருகின்றது என்பது தெளிவாக தெரியவில்லை. ஒரு சிலருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு முதல் நான்கு முறை இது போன்ற கால்கள் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக புதிய சிம் வாங்கி பயன்படுத்தும் நபர்களுக்கு சர்வதேச எண்கள் கொண்ட கால்கள் அடிக்கடி வருவதாக புகார் கூறுகின்றனர். இது போன்ற போன் கால்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்? நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம்? கவலைப்படாதீர்கள், இது போன்ற போன் கால்கள் வரும் பொழுது முதலில் பதட்டப்பட வேண்டாம்.

Read More : இன்ஸ்டாகிராம் ரீல்களை டவுன்லோடு செய்வது எப்படி? - இதோ ஈஸி டிப்ஸ்!

அந்த காலை ரிப்போர்ட் செய்து அந்த எண்ணை பிளாக் செய்தால் போதுமானது. மேலும் அது போன்ற கால்கள் அல்லது மெசேஜ்கள் அல்லது அதில் அனுப்பப்படும் லிங்குகள் போன்ற எவற்றையும் கிளிக் செய்து விடக்கூடாது. ஏனெனில் அது போன்ற லிங்க்ஸ் மூலமாக அனுப்பப்படும் மால்வேரை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் உங்கள் பணம் மற்றும் தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே, தெரியாத நபர்களிடம் வரும் போன் கால்களை ஒருபோதும் அட்டென்ட் செய்ய வேண்டாம், மாறாக அந்த எண்ணை பிளாக் செய்து விடுங்கள்.

குறிப்பு: உங்களுக்கு வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பறிக்கும் மோசடிகளும் வாட்ஸ் அப்பில் நடந்தேறி வருகிறது. ஆகவே இது போன்ற மோசடிகளில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு நபர் உங்களை வேலைக்காக வாட்சப் மூலமாக அணுகும் பொழுது, அவரின் உண்மைத்தனத்தை ஒரு முறைக்கு இருமுறை ஆராய்ந்து பார்த்த பிறகே அந்த வேலையில் ஈடுபடுங்கள்.

top videos

    இப்பொழுது ஒரு எண்ணை எப்படி பிளாக் செய்வது மற்றும் ஒரு நபரை எப்படி ரிப்போர்ட் அல்லது புகார் செய்வது என்பதை பார்க்கலாம்:

    படி 1: முதலில் உங்கள் வாட்ஸ் அப்பை திறந்து கொள்ளுங்கள். அதில் மோர் ஆப்ஷன்ஸ் (More options) என்பதை கிளிக் செய்து செட்டிங்ஸை (Settings) தேர்வு செய்யவும்.
    படி 2: இப்பொழுது பிரைவசி (Privacy) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் பிளாக்டு கான்டாக்ட்ஸ் (Blocked contacts) என்பதை தேர்ந்தெடுங்கள்.
    படி 3: "ஆட்" (Add) என்பதை கிளிக் செய்யவும்.
    படி 4: இப்பொழுது நீங்கள் பிளாக் செய்ய நினைக்கும் நபரின் எண்ணை தேடியோ அல்லது செலக்ட் செய்வதன் மூலமாகவோ அவரை நீங்கள் பிளாக் செய்து விடலாம்.
    First published:

    Tags: Scam, WhatsApp