முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஸ்மார்ட் போன்கள் இல்லாத உலகம் சாத்தியமா...? இனி வரும் காலம் எப்படி இருக்கும்?... பிரமிக்க வைக்கும் தகவல்கள்..!

ஸ்மார்ட் போன்கள் இல்லாத உலகம் சாத்தியமா...? இனி வரும் காலம் எப்படி இருக்கும்?... பிரமிக்க வைக்கும் தகவல்கள்..!

ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன்

நம் உடலே ஸ்மார்ட் போனுக்கு தேவையான சார்ஜை தயாரித்து கொடுக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இனி வரும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கும்

  • Last Updated :
  • Tamil Nadu |

உலக மக்கள் தொகையில் 80 % பேரிடம் செல்போன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 முறை செல்போனை பார்ப்பதாக சொல்லப்படுகிறது. வானிலை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள, பாடல்களை கேட்க, புகைப்படம் எடுக்க, மெயில் அனுப்ப என ஒவ்வொன்றிற்கும் தனி தனி சாதனங்களை சார்ந்திருந்த நாம் இன்று அனைத்தையும் ஸ்மார்ட் போன் மூலம் செய்யும் நிலைக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.

உண்மையில் சொல்லப்போனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்துள்ள ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் அசாதாரணமான அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் ஒரு நாள் நம் உடலிலேயே ஸ்மார்ட்போனை இணைத்து பயன்படுத்தும் சூழல் உருவாகலாம் என்று செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் கணித்துள்ளார். மைக்ரோ சிப், சென்சார் போன்றவை நம் உடலில் பொருத்தப்பட்டு நாம் சிந்திக்கும் விடயங்கள் திரையில் தோன்றும் சூழல் வரலாம் என்று கூறப்படுகிறது.

தனியாக திரை என்ற ஒன்று இல்லாமல் சுற்றி இருக்கும் சுவர் மேசை போன்றவையே திரையாக மாற்றி பயன்படுத்தப்படும் என்று கணித்திருக்கிறார்கள். virtual reality தொழில்நுட்பம் போன்று கண்களில் அணியும் கண்ணாடியில் திரையில் தோன்றும் பிம்பங்கள் தெரியலாம். நம் உடலிலேயே ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதால் வெளியில் இருந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

நம் உடலே ஸ்மார்ட் போனுக்கு தேவையான சார்ஜை தயாரித்து கொடுக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இனி வரும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் நாம் உறங்குகிறோம் என்றால், நம் ஸ்மார்ட்போன் தானாகவே எதிர்முனையில் இருப்பவருக்கு உறங்குவது குறித்த தகவல் தெரிவித்துவிடும்.

கட்டாயம் வாசிக்க: செல்போன் சார்ஜ் மெதுவாக ஏறுதா? இதை செய்தால் போதும்!

top videos

    இப்படி பல தொழில்நுட்ப புரட்சிகள் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பார்த்தோமேயானால் ஹாலிவுட் படங்களில் வரும் அசாதாரணமான கற்பனை கலந்த தொழில்நுட்ப காட்சிகள் எல்லாம், சாமானிய மனிதரின் வாழ்விலும் சாத்தியம் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுப்படுகிறது.

    First published:

    Tags: Smart Phone