முகப்புத்தகம் என தமிழில் கூறப்படும் ஃபேஸ்புக் உருவாகி 2 தசாப்தங்களை நெருங்குகிறது. 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் 2015ஆம் ஆண்டில் 100 கோடி பயனாளர்களைப் பெற்றது. தற்போது 300 கோடி பயனாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போது அதன் இருப்பு சந்தேகத்திற்குள்ளாகி உள்ளது.
300 கோடி பயனாளர்கள் இருந்தாலும், 200 கோடி பேர்தான் நாள்தோறும் லாகின் செய்வதாகக் கூறப்படுகிறது. பதின்பருவத்தினர் ஃபேஸ்புக்கை தனக்கான தளமாக நினைப்பதில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்துடைய மற்றொரு படைப்பான இன்ஸ்டாகிராமின் வளர்ச்சியே, ஃபேஸ்புக்கின் வளர்ச்சியை குறைத்துவிட்டதாகவும் கருதப்படுகிறது.
புகைப்படம் பகிர்தல், படைப்பாற்றல் மிகுந்த ரீல்ஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட இன்ஸ்டாகிராமில் உள்ள ஆர்வம் ஃபேஸ்புக் மீது இளம் வயதினருக்கு இருப்பதில்லை. ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தி வந்தவர்கள்கூட, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக கவனம் செலுத்தத் தொடங்குவதையும் பார்க்க முடிகிறது. வயதானவர்களுக்கான தளமாகவும் ஃபேஸ்புக் மாறிவிட்டதோ என்ற எண்ணம் பலரிடம் ஏற்படத் தொடங்கிவிட்டது.
மேலும் படிக்க... கார்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... எவ்வளவு தெரியுமா?
ஆனால், இதனை அப்படியே தொடரவிட ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தயாராக இல்லை. முன்பு, இளம் வயது குழுக்களை அமைத்து புதிய ஐடியாக்களை கேட்டு வந்த ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது ஒட்டுமொத்த நிறுவனத்தின் நோக்கமாக அதனை மாற்றியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, algorithm ஆகியவற்றை டிக் டாக் எப்படி பயன்படுத்தி, இளம் வயதினரை ஈர்க்கிறதோ, அந்த அடிப்படையை உருவாக்க விழைந்துள்ளது ஃபேஸ்புக்.
90s கிட்ஸ்களின் தொடக்கக்கால ஆர்குட் வரிசையில், ஃபேஸ்புக்கும் இணைந்துவிடாமல் தன்னை தகவமைத்துக்கொள்ளுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Facebook