முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ட்விட்டரிலும் இனி வீடியோ கால் பேசலாம்.. எலான் மஸ்க் தெரிவித்த சூப்பர் தகவல்..!

ட்விட்டரிலும் இனி வீடியோ கால் பேசலாம்.. எலான் மஸ்க் தெரிவித்த சூப்பர் தகவல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

ஃபோன் நம்பரை பகிராமலேயே டிவிட்டரில், ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • inter, IndiaAmericaAmerica

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக அதிகாரப்பூர்வ கணக்கிற்கு சந்தா செலுத்தும் முறையை எலான் அறிமுகம் செய்தார். இதனால் பலரின் ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளு டிக் பறிக்கப்பட்டது. மேலும் டிவிட்டரில் வெளியாகும் முக்கிய கட்டுரைகளை படிப்பதற்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டார்.

இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போலவே, ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதி டிவிட்டரிலும் அறிமுகம் ஆக உள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் இது ஆரம்பகட்ட பரிசோதனையில் மட்டுமே தற்போது இருப்பதாக கூறியுள்ளார்.

top videos

    இந்த வசதி விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதில் இருந்து அதனை லாபகரமாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். எனவே, டிவிட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Elon Musk, Twitter