உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 45 கோடி பயனர்களைக் கொண்டுள்ள சமூக ஊடகம் தான்ட்விட்டர் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவத்தை கடந்த 2022ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க். அப்போதிருந்தே அதிரடிக்கு குறைவில்லை. எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு ஏராளமான ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பினார். புளுடிக் ஆப்சனை தொடர்ந்து வைத்துக்கொள்வதற்குக் கட்டணம் நிர்ணயித்தார். ஊழியர்களுக்கு வேலை நேரத்தை அதிகரித்தார். இப்படி அடுக்கடுக்காக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் எலான் மஸ்க். அந்த வரிசையில் இப்போது மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி பரபரப்பை மட்டுமல்லாமல், ட்விட்டரை பயன்படுத்தாமல் இருக்கும் யூசர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான யூசர்கள் தங்களது ட்விட்டரை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் கணக்குகளையும் ஆர்ச்சிவ் லைனுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே இது தொடர்பாகக் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரு கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தொடர்ந்து ஆறு மாதங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகள் தான் செயல்படாத கணக்குகளாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது அந்த அவகாசம் ஒரு மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் அச்சுறுத்துவது போன்ற இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தனது அதிருப்தியைப் பதிவு செய்யும் வகையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று ட்விட்டர் கணக்கில் இருந்து தானாகவே வெளியேறியுள்ளது.
Also Read : ஐஆர்எம்-வுடன் இணைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்..
இந்த முடிவு குறித்து எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு பதிலளித்த யூசர் ஒருவர், "இன்ஆக்டிவ் அக்கவுண்ட் நீக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, ட்விட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய தவறான முடிவாக மாறக்கூடும். பலரது 'வரலாற்று' ட்வீட்கள் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே, இந்த முடிவைச் செயல்படுத்துவதற்கு முன்பாக எலான் மஸ்க் 'மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். இதைக்கண்ட எலான் மஸ்க் இன்ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ் ட்வீட்கள் 'Archived' செய்யப்படும் என்று அவருக்குப் பதிலளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.