மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் கருவிகளில் (AI Generative Tools) அதிக அளவில் முதலீடு செய்கின்றன. அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்களும் இதில் தான் கவனம் செலுத்துகின்றன. இந்த பட்டியலில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசன்ட்டும் சமீபத்தில் இணைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவால் வேலைகள் பறிபோகும் என்ற கவலைகள் நிலவி வரும் வேளையில், மென்பொருள் நிறுவனங்களின் இந்தத் திட்டங்கள் மேலும் குழப்பத்தை உருவாக்குகின்றன. சமீபத்தில் தனது பணியாளர்களை ஒரு சதவீதம் குறைப்பதாக அறிவித்த காக்னிசன்ட் நிறுவனம், தற்போது AI உருவாக்கும் கருவிகளில் முதலீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு கருவிகளில் முதலீடு
முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசண்ட், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தனது ஊழியர்களின் வேலையை விரைவுபடுத்தவும், இறுதியில் அவர்களின் உற்பத்தித்திறனை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனை நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் உறுதிப்படுத்தினார். தற்போது, இந்த புதிய தொழில்நுட்பம் ஆலோசனை, வடிவமைப்பு, பொறியியல் மற்றும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களுடன் கருத்தாய்வு அமர்வுகள்
காக்னிசென்ட் நிறுவனத்தில் 'AI Accelerator' என்ற செயல்முறை உள்ளது என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவர்கள் 30 வாடிக்கையாளர்களுடன் கருத்தாய்வு அமர்வுகளை நடத்தியுள்ளனர். இப்போது பொதுவான சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிந்து வருகிறார்கள்.
3,500 ஆட்குறைப்பு
காக்னிசன்ட் சமீபத்தில் 3,500 ஊழியர்களை அதாவது அதன் பணியாளர்களில் ஒரு சதவீதத்தை பணிநீக்கம் செய்வதை உறுதிப்படுத்தியது. இந்த பணிநீக்கங்கள் இரண்டு வருட மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். பணிநீக்கச் செலவுகளை ஈடுகட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,498 கோடி) செலவழிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செலவுகளைக் குறைக்க காக்னிசண்ட் அலுவலகங்களை மூடுகிறது
நிறுவனம் சில அலுவலகங்களை மூடிவிட்டு, அதன் மூலம் செலவுகளைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களில் 10-15 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகங்களுக்கு வருகிறார்கள். இந்திய ஐடி ஊழியர்களில் 30-40 சதவீதம் பேர் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தங்கி, அலுவலகங்களுக்கு வராமல் வேலை செய்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cognizant