தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சில நன்மைகளை கொடுத்தாலும் அதற்கு இணையான தீமைகளையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட தீமைகளில் முன்மையானது வேலையிழப்பு. உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இப்போது AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறுவனங்களை ஆக்கிரமித்துக் கொண்டால் லட்சக் கணக்கான ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும். ஏனென்றால் நூறு பேர் செய்யக் கூடிய வேலையை இந்த AI தொழில்நுட்பம் மிக எளிமையாக செய்து முடித்துவிடும். அதன் முன்னோடியாக உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தான் காக்னிசன்ட் நிறுவனமானது, தனக்கு ஏற்படும் செலவுகளை குறைப்பதற்காக 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாகவும், ஆபிஸ் ஸ்பேஸை குறைக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து காக்னிசன்ட் ஊழியர்கள் மீள்வதற்கு முன்பே மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். திடீர் பணிநீக்கத்தை அறிவித்த கையோடு, காக்னிசன்ட் நிறுவனமானது சாட்ஜிபிடி போன்ற ஜெனரேட்டிவ் AI டூல்களில் முதலீடு செய்ய உளள்தாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெனரேட்டிவ் AI டூல்களின் நுழைவானது ஆலோசனை, வடிவமைப்பு, பொறியியல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள தங்களது ஊழியர்களின் வேலையை விரைவுபடுத்தும். இதன் மூலம் காக்னிசன்ட் ஊழியர்களின் உற்பத்தித்திறன் இரட்டிப்பாகும் என்று ரவிக்குமார் நம்புகிறார்.
Also Read : தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!
ஆனால் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் காட்ஃபாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் ஏஐ-யின் இந்த திடீர் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் மனிதர்களின் வேலைகளை பறிக்கும் என்று எச்சரித்துள்ளார். ஜெஃப்ரி ஹிண்டனின் கணிப்பை நிஜமாக்குவது போல ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைகளை செய்ய மனிதர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளளார்.
கடந்த ஐந்தாண்டு கால கட்டத்தில் 30 விழுக்காடு வேலைகள் AI மற்றும் ஆட்டோமேஷனால் திறம்பட செய்யப்பட முடிந்ததை என்னால் எளிதாக பார்க்க முடிந்தது. ஐபிஎம்-இல் சுமார் 26,000 தொழிலாளர்கள் உள்ளனர். எனவே வரும் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7,800 வேலைகள் AI மூலம் ரீப்ளேஸ் செய்யப்படலாம் என்று அரவிந்த் கிருஷ்ணா கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Artificial Intelligence, Cognizant