தொழில்நுட்ப சந்தையில் மேலும் ஒரு சாதனமாக ரெட்மி வாட்ச்-3 அறிமுகமாகியுள்ளது. இந்த வாட்ச்யின் சிறப்பங்கள் என்ன? விலை என்ன? ஏன் மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை விட மக்கள் இதன் மீது அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது போன்ற முழு தகவலையும் இதில் தெரிந்துகொள்வோம்.
ரெட்மி வாட்ச் 3 கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகமான பிறகு, இப்போது உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரெட்மி ஸ்மார்ட் வாட்ச் 5 மேஜர் சாட்டிலைட் பொசிஷனிங் அமைப்புகளுடன் வருகிறது. இந்த வாட்சில் புளூடூத் வாய்ஸ் காலிங் அழைப்பு வசதி, மெட்டல் ஃபினிஷ் கொண்ட பிரீமியம் தோற்றம் என்று பல விதங்களில் அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த வாட்ச்சில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ஸ் வசதியும் உள்ளது. இதன் மூலம் வானிலை தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், அலாரத்தை அமைக்கவும், ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தவும் முடியும்.
ரெட்மி வாட்ச் 3 பயனர்கள் பக்கவாட்டு பட்டனை மூன்று முறை தட்டுவதன் மூலம் எமெர்ஜென்சி தொடர்புக்கு குயிக் காலிங் செய்ய முடியும். ரெட்மி நிறுவனத்தின் தகவல் படி, இந்த புதிய வாட்ச், வரும் மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.
ரெட்மி வாட்ச்-3 சாதனத்தின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த டிவைஸ் 390 × 450 பிக்சல் ரெசல்யூசன் கொண்ட 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை கொண்ட 1.75' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
Also Read : டிக்டாக் செயலிக்கு உலக அளவில் அதிகரிக்கும் எதிர்ப்பு.. எத்தனை நாடுகளில் தடை தெரியுமா..?
இந்த டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இரத்த ஆக்ஸிஜன் சென்சார், இதயத் துடிப்பு சென்சார், ஸ்டேப் கவுண்ட், ஸ்போர்ட்ஸ் மோட், என்று பல அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட் வாட்ச் புளூடூத் v5.2 வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
இது ஆண்ட்ராய்டு 6.0 அல்லது iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்ட சாதனத்துடன் இணக்கமானது. ரெட்மி வாட்ச் 3 இன் விலை பற்றிப் பேசுகையில் இது EUR 119 விலையில் அறிமுகமாகியுள்ளது, இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 10,600 ஆகும். இது கருப்பு மற்றும் ஐவரி வண்ணங்களில் கிடைக்கும். சிறப்பான தொழில்நுட்ப வசதி மற்றும் சிறப்பம்சங்களுடன் மிகவும் குறைவான விலைக்கு ரெட்மி வாட்ச்-3 கிடைக்கும் என்பதால் விற்பனையில் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Redmi, Smart watch