இந்தியாவில் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்தது. அதற்கு அடுத்த 10 மாதங்களில் பிஜிஎம்ஐ கேம்-ஐ கிராஃப்டான் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஏற்கனவே இருந்த பப்ஜி விளையாட்டில் இருந்த அதே அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட சீன ஆப்-களில் பிஜிஎம்ஐ ஆப் மிக பெரிய ஒன்றாகும். இதனால் பப்ஜி ரசிகர்கள் BGMI செயலியை மனதார ஏற்றுக்கொண்டார்கள்
பப்ஜி ஆப்-ஐ இந்திய அரசு தடை செய்தபோது சுட்டிக்காட்டப்பட்ட அத்தனை குறைகளையும் சரி செய்துவிட்டதாக பிஜிஎம்ஐ ஆப் நிறுவனம் கூறினாலும், பெயர் மாற்றத்தை தவிர பெரிய அளவுக்கான மாற்றம் எதுவும் நடக்கவில்லை என்று கூறப்பட்டது. பின்னர் அடுத்தடுத்த சம்பவங்களை சுட்டிக்காட்டிய மத்திய அரசு BGMI ஐ தடை செய்தது. Battlegrounds Mobile India (பிஜிஎம்ஐ) என்ற விளையாட்டு கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் BGMI செயலியின் புதுக்கப்பட்ட பதிப்பு மீண்டும் இந்தியாவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 3 மாத சோதனை அடிப்படையில் இருக்கும் என்றும் அதன்பின்னர் அரசு முடிவெடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
இது குறித்து பேசியுள்ள BGMI டெவலப்பர் மற்றும் தென் கொரியாவை தளமாகக் கொண்ட கிராஃப்டன், "எங்களை மீண்டும் செயல்பட அனுமதித்ததற்காக இந்திய அதிகாரிகளுக்குநன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்திய அரசு குறிப்பிட்ட பல கட்டுப்பாடுகளை கடைபிடித்தே மீண்டும் BGMI இந்தியாவுக்குள் வரும் என கேம் பிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். BGMI மீண்டும் வருகிறது என்ற அறிவிப்பு கேம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PUBG