முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இன்ஸ்டாகிராம் ரீல்களை டவுன்லோடு செய்வது எப்படி? - இதோ ஈஸி டிப்ஸ்!

இன்ஸ்டாகிராம் ரீல்களை டவுன்லோடு செய்வது எப்படி? - இதோ ஈஸி டிப்ஸ்!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

இன்ஸ்டாகிராமில் தனக்கு பிடித்த ரீல்ஸ்களை டவுன்லோடு செய்ய முடியவில்லையே என கவலைப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகத் தான் இந்த பதிவு

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்மார்ட் போன் பெருமளவு புழக்கத்தில் வந்த பிறகு நினைத்தவர்கள் எல்லாம் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். சிவாஜி, எம்ஜிஆர், பத்மினி, சரோஜா தேவி, ரஜினி, கமல், விஜய், அஜித் என தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பாடல்கள், வசனங்கள் மற்றும் காட்சிகளில தாங்களும் நடித்து தங்களின் பிறவிப் பயனை அடைந்து வருகிறார்கள். இவையெல்லாம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வந்த பிறகு தான் சிலருக்கு ரீல்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்வது தான் பொழுது போக்கு என்றால் சிலருக்கு ரீல்ஸ் பார்ப்பது தான் பொழுது போக்கே.

நாள் முழுவதும் ரீல்ஸ் பார்ப்பதையே வேலையாக வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி ரீல்ஸ் வீடியோக்களை விரும்பி பார்க்கும் சிலர் தங்களுக்கு பிடித்தமான ரீல்ஸ்களை டவுன்லோடு ஆசைப்பட்டிருப்போம். ஆனால் இன்ஸ்டாகிராம் அதை அனுமதிக்கவில்லை. அதற்கும் சில வழிகள் இருக்கின்றன. அவை தான் மூன்றாம் தரப்பு வெப்சைட்டுகளை பயன்படுத்தி அந்த வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த ரீல்ஸ் வீடியோவை டவுன்லோடு செய்வதற்கு முதலில் அதை நீங்கள் உங்கள் கணக்கில் சேவ் செய்திருக்க வேண்டும். அதனால் முதலில் வீடியோவை சேவ் செய்வது எப்படி என்பதை முதலில் பார்க்கலாம்.

Read More : இப்படித்தான் சார்ஜ் போடனுமாம்..! இல்லாட்டி உங்க ஃபோன் காலி ஆகிவிடும்..!

உங்கள் மொபைலில் Instagram சென்று Reels என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் சேவ் செய்ய விரும்பும் ரீல்ஸ் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும். மூன்று-புள்ளி ஐகானைத் தட்டிய பிறகு 'Save' என்பதைக் கிளிக் செய்யவும். ரீல்ஸ் சேவ் செய்யப்படும். சேவ் செய்த ரீல்ஸ்களைப் பார்க்க, நீங்கள் இன்ஸ்டாகிராம் மெயின் பக்கத்திற்குத் திரும்ப வேண்டும். அடுத்து, உங்கள் ப்ரொஃபைல் ஐகானைத் தட்டவும். மூன்று வரி ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். செட்டிங்ஸ் மெனுவிலிருந்து Account ஆப்சனை கிளிக் செய்யவும். அங்கே நீங்கள் சேவ் செய்த ரீல்ஸ் வீடியோ சேமிக்கப்பட்டிருக்கும்.

top videos

    இப்போது அதை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

    பல்வேறு மூன்றாம் தரப்பு தளங்கள் மற்றும் பயன்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் Instagram ரீல்ஸ்களை நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
    மூன்றாம் தரப்பு பயன்பாடுகளான iGram, Ingrammer, Clipbox மற்றும் OBS Studio போன்ற தளங்களை பயன்படுத்தி உங்கள் இன்டா ரீல்ஸ்களை டவுன்லோடு செய்யலாம். இந்த குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் Instagram Reels வீடியோவின் URL ஐ Copy செய்துகொள்ளுங்கள்.
    காப்பி செய்யப்பட்ட URL-ஐ இந்த iGram, Ingrammer, Clipbox தளங்களில் தரப்படும் டவுன்லோட் பாரில் பேஸ்ட் செய்யவும். அடுத்து, பக்கத்தின் கீழே சென்று Download.mp4 விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    அந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ டவுன்லோடு செய்யப்படும். இனி ஆஃப்லைனில் இருக்கும் போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை கண்டு மகிழலாம். இதற்கான செயலிகளை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
    அல்லது வெப் பிரௌசர்களில் இந்த இணையதள பக்கங்களை ஓபன் செய்து நேரடியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதே அம்சத்தை பயன்படுத்தி உங்களால் இன்ஸ்டாகிராம் போஸ்ட், இன்ஸ்டாகிராம் போட்டோஸ் போன்றவற்றையும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்
    First published:

    Tags: Instagram, Technology