முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் ஷோரூம் திறந்த ஒரு மாதத்திலே கோடிகளை அள்ளிய ஆப்பிள் நிறுவனம்..!

இந்தியாவில் ஷோரூம் திறந்த ஒரு மாதத்திலே கோடிகளை அள்ளிய ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள்

ஆப்பிள்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய மின்னனு பொருள் விற்பனையாளராக உருவெடுத்துள்ளது. மேலும் பல நகரங்களிலும் கிளைகளைத் திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய மின்னனு பொருள் விற்பனையாளராக உருவெடுத்துள்ளது. மேலும் பல நகரங்களிலும் கிளைகளை திறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் எப்போதுமே வரவேற்பு அதிகம்.  சீனாவில் தனது உற்பத்தி தொழிற்சாலையை கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலும் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது. இந்தியா ஆப்பிள் நிறுவனத்தின் மிகச் சிறந்த சந்தை. எனவே தான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது நேரடி விற்பனை மையங்களை திறந்துள்ளது.

மும்பை மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் ஆப்பிள் நேரடி விற்பனை மையங்களை அதன் உரிமையாளர் டிம் குக் திறந்து வைத்தார். இந்த இரண்டு கிளைகளிலும் சேர்த்து கடந்த ஒரு மாதத்தில் 50 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள ஷோரூமை விட மும்பையில் இருக்கும் ஆப்பிள் ஷோரூம் மிகப்பெரியது. 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த ஷோரூம்  அமைந்துள்ளது.

இரண்டு கிளைகளிலும் திறப்பு விழா அன்றே ஆறாயிரம் வாடிக்கையளர்கள் வந்து சென்றுள்ளனர். திறப்பு விழா அன்றே இரண்டு கிளைகளிலும் சேர்த்து பத்து கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை இல்லாத காலங்களில் மற்ற மின்னனு பொருள் விற்பனைக் கடைகளில் ஒரு மாதத்திற்கு 7 முதல் 8 கோடி வரை தான் விற்பனை இருக்கும்.

இந்நிலையில் ஒரே நாளில் ஆப்பிளின் இரண்டு ஷோரூம்களிலும் சேர்த்து பத்து கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மும்மை ஷோரூமிற்கு மாதம் 42 லட்சம் ரூபாயும், டெல்லியில் உள்ள ஷோ ரூமிற்கு மாதம் 40 லட்சம் ரூபாயும் வாடகையாக கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் மிகவும் வெற்றிகரமாக விற்பனையை மேற்கொண்டிருப்பதால் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட மற்ற சில நகரங்களிலும் கிகைளை திறக்க ஆப்பிள் நிறுவனம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Also Read : சூப்பர் கேமரா.. அடடே லுக்.. ஒன் ப்ளஸ் அறிமுகம் செய்யவுள்ள அடுத்த மாடல் போன்!

அதிக எண்ணிக்கையிலான வசதியான நுகர்வோர்களைக் கொண்ட முக்கிய நகரங்களில் ஆப்பிள் தனது கிளைகளை திறந்திருப்பதாலும், மற்ற சில்லறை விற்பனையகங்களில் இல்லாத தனித்துவமான ஷாப்பிங் அனுபவம் கிடைப்பதாலும், ஏராளமான ஆப்பிள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் அதிக அளவில் ஆப்பிள் தாயாரிப்புகள் விற்பனையாகியுள்ளன என்று கூறப்படுகிறது. மும்பையில் ஆப்பிள் பிகேசி என்ற பெயரில் ஏப்ரல் 18 ஆம் தேதி அதன் உரிமையாளர் டிம் குக் திறந்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆப்பிள் கிளை திறக்கப்பட்டது.

First published:

Tags: Apple, Technology