முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் பங்களிக்கும் ஆப்பிள் நிறுவனம்..!

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் பங்களிக்கும் ஆப்பிள் நிறுவனம்..!

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 2022ஆம் (ஜனவரி - டிசம்பர்) ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மேக் இன் இந்தியா தயாரிப்பு ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கையில் 3 சதவீதம் குறைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்பிள் நிறுவனத்தின் மேக் இன் இந்தியா தயாரிப்புகள் ஓராண்டில் 65 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் 12 சதவீத வளர்ச்சியை அந்த நிறுவனம் எட்டியுள்ளது. உள்நாட்டில் தயாரான ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீத பங்களிப்பை ஆப்பிள் நிறுவனம் தற்போது கொண்டிருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் இதே பங்களிப்பு 12 சதவீதமாக இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் 13 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 2022ஆம் (ஜனவரி - டிசம்பர்) ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மேக் இன் இந்தியா தயாரிப்பு ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கையில் 3 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 188 மில்லியன் ஃபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவாகும்.

ஏற்றுமதி குறைய காரணம் என்ன : மிக நுணுக்கமான அளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் தேவைகளை குறைக்க நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே ஏற்றுமதி எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிய வருகிறது. அதிலும், 2022ஆம் ஆண்டின் பிற்பாதியில் ஏற்றுமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Read More : விரைவில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன்..? வெளியாகும் தகவல்கள்..!

தொழில்நுட்ப வர்த்தக ஆய்வாளர் பிரச்சீர் சிங் இதுகுறித்து கூறுகையில், “ஆப்பிள் நிறுவனத்தின் எலெக்ட்ரானிக் உற்பத்தி பார்ட்னர்களான பாக்ஸ்கான் ஹான் ஹை மற்றும் விஸ்ட்ரோன் ஆகிய நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் வளரும் உற்பத்தியாளர்களாக உருவெடுத்துள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “2022ஆம் ஆண்டில் இந்தியாவில் மிக அதிகப்படியான அளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்களின் பட்டியலில் பாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரோன் ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன’’ என்று கூறினார். இந்த இரண்டு நிறுவனங்களுக்குமே பிஎல்ஐ ஊக்கத்தொகை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் ஓப்போ

2022ஆம் ஆண்டில் மேக் இந்தியா தயாரிப்புகளை அதிகப்படியாக ஏற்றுமதி செய்த நிறுவனங்களில் 22 சதவீத பங்களிப்புடன் ஓப்போ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் உள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப ஆய்வாளர் தருண் பதக் கூறுகையில், “ஆப்பிள், சாம்சங் மற்றும் இதர எலெக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனங்களின் உள்ளூர் தயாரிப்புகள் 2022ஆம் ஆண்டில் அதிகரித்திருக்கின்றன. உள்ளூர் தேவைகள் குறைந்து வந்த போதிலும் இந்த வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது.

top videos

    மத்திய அரசிடம் இருந்து அண்மையில் வழங்கப்பட்ட பிஎல்ஐ ஊக்கத்தொகை, மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்ற இதர சலுகைகள் போன்றவை காரணமாக உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.முன்னதாக, உயர் ரக ஆப்பிள் ஃபோன்களை பயன்படுத்துவதற்கு பல இந்தியர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில், அவை பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது உள்நாட்டிலேயே உற்பத்தி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Apple, Tamil Nadu, Technology