உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் மிகப்பெரும் அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. அதற்கேற்ற வகையில் அந்நிறுவனமும் பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் உத்தியைக் கையாண்டு வருகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர்கள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளாலும், இந்திய மக்கள் அந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையினாலும் நாளுக்கு நாள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர் பட்டாளமானது கூடிக் கொண்டே வருகிறது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ ஆன டிம் குக், இந்தியாவைப் பற்றியும் இந்தியச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றியும் பேசி உள்ளார். இந்தியச் சந்தை என்பது எப்போதும் உற்சாகமான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் கவனம் முழுவதும் இந்தியச் சந்தையின் மீதுதான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத காலிறுதியில் 94.8 பில்லியன் டாலர்கள் வருவாயை அந்த நிறுவனம் ஈட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 24 பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டியுள்ளது என்பதும் முக்கியமானது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ, இந்த அற்புதமான முடிவுகளுக்காக மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக முன்னர் எப்போதும் இல்லாத வகையில், கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஆனது மிகப் பெருமளவில் விற்பனையாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ச்சியாகச் செய்து வரும் முதலீடுகள் மற்றும் விரிவாக்கத்தின் காரணமாக இந்த அற்புத முடிவானது கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
Also Read : 5G சிக்னலின் மூலம் ஏலியன்களால் பூமியின் இருப்பிடத்தை கண்டறிய முடியுமாம்..!
கடந்த காலாண்டு தரவுகளைப் பார்ப்பதின் மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் எந்த அளவு வளர்ந்து வருகிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது. மேலும் ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.
“இந்தியச் சந்தை என்பது எப்போதும் மிகவும் உற்சாகமான ஒன்று. ஆப்பிள் நிறுவனத்தின் கவனம் முழுவதும் தற்போது இந்தியாவில் தான் உள்ளது. இந்தியச் சந்தையில் நிலவும் சுறுசுறுப்பு மற்றும் துடிப்பு ஆகியவை மிகவும் அசாதாரணமான ஒன்றாகும்” என்று அவர் கூறியுள்ளார். அதுபோலவே இந்தியாவில் தங்களது சந்தையை விரிவுபடுத்தவும் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் அந்த நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு பார்ட்னர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Apple ipad, Apple iphone