நாடு முழுவதும் 5ஜி சேவையை அனைத்து நகரங்களுக்கும் வழங்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மற்ற நாடுகளில் 5ஜி சேவைக்குக் கணிசமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலும், கூடுதல் கட்டணமின்றி 5ஜியைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரே நாடாக இந்தியா மட்டுமே திகழ்கிறது.
இந்நிலையில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் செலவே இல்லாமல் அளவற்ற 5ஜி சேவையை ஒரு ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் வழங்குகிறது. அதை எப்படிப் பெறுவது, யாரெல்லாம் இந்த சலுகையைப் பெற முடியும் என்பதை விபரமாக இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபர் மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சலுகையின் விவரங்களை ஏர்டெல் பயனர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அன்லிமிடெட் 5ஜி சேவையைப் பெறுவதில் சில சிக்கலை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களிடம் 4ஜி சிம் இருந்தாலும், உங்களால் ஏர்டெல்லின் 5ஜி சேவையைப் பெற முடியும். உங்கள் ஏரியாவில் 5ஜி கவரேஜ் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விஷயமாகவும்.
இது தவிர, உங்களின் அடிப்படை திட்டம் எது என்பது முக்கியமானது. ஏர்டெல்லின் 5ஜி டேட்டா சலுகையைப் பெற உங்கள் மொபைல் எண் ரூ.239 அல்லது அதற்கு மேலான திட்டத்தில் ரீசார்ஜ் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில், ரூ.455 மற்றும் ரூ.1799 போன்ற திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் 5ஜி சலுகை கிடைக்காது. இது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லின் 5ஜி சலுகை போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும். ஒருவேளை, வாடிக்கையாளர் குடும்ப போஸ்ட்பெய்டு திட்டத்திற்குக் குழு சேர்ந்திருந்தால், அனைத்து பயனர்களும் வரம்பற்ற 5G டேட்டா சலுகையை தனித்தனியாகக் கோர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சரி, இப்போது ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை எவ்வாறு பெறுவது? என்று பார்க்கலாம்.
Also Read : கேமரா வேற லெவல்.. பட்ஜெட் விலையில் வெளியான Realme C55..!
ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாகக் கிடைக்கிறது. இதற்கு முதலில் உங்கள் போனில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆப்பில் home பகுதிக்குச் சென்று,Unlimited 5G டேட்டா பேனரைக் கண்டுபிடித்து அதை கிளிக் செய்யவும். பிறகு, சலுகையைப் பெறுவதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள். Claim Now ஆப்ஷனைத் தட்டினால், வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பெறத் தொடங்குவீர்கள். ஏர்டெல்லின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபர் டெல்கோவின் 5ஜி கவரேஜ் உள்ள பகுதிகளில் மட்டுமே வேலை செய்யும்.
5ஜி சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏர்டெல் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான ஒன்று, பயனர்கள் வரம்பற்ற 5G டேட்டா சலுகையில் இருந்தால் ஹாட்ஸ்பாட் வழியாக மற்றவர்களுடன் டேட்டாவை பகிர முடியாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Airtel