கடந்த ஆண்டிலிருந்து 5G தொழில் நுட்பமானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் படிப்படியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒயர்லெஸ் தொழில்நுட்பங்கள் உலக அளவில் தொலைத்தொடர்பு துறையில் மிகப் பெரும் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
இவற்றினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் இதன் மூலம் மனித குலத்திற்கு உடலளவிலும் மனதளவிலும் ஆபத்து ஏற்படலாம் என்பது போன்ற கருத்துக்களும் நிலவி வருகின்றன.
அந்த வகையில், பிரபல Monthly Notices of the Royal Astronomical Society நாளிதழில் வெளியான சமீபத்திய அறிக்கை ஒன்றில் செயற்கைக்கோள் மற்றும் மொபைல் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் 5 ஜி தொழில் நுட்பமானது ஏலியன்களுக்கு பூமியின் இருப்பிடத்தை கண்டறிய உதவும் எனவும், இதனால் மனிதர்களால் ஏலியன்களுடன் விரைவில் தொடர்பு கொள்ள முடியும் என்பது போன்று கருத்தை அதில் கூறப்பட்டு உள்ளது.
எப்படி இது வேலை செய்யும்?
முன் இருந்த மிக சக்தி வாய்ந்த தொலைக்காட்சி சிக்னல்கள் தற்போது மிகப் பெரும் அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இணையம் மற்றும் கேபிள் டிவியின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், இந்த சக்தி வாய்ந்த தொலைக்காட்சி சிக்னல்கள் எந்த விதத்திலும் பூமியை தாண்டி கசிவதற்கு வாய்ப்புகள் இல்லை.
1990-களுக்கு முன்பு வரை மொபைல் கம்யூனிகேஷன் சிஸ்டம் என்பது நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது மிகப்பெரும் அளவில் மொபைல் கம்யூனிகேஷன் சிஸ்டமானது வளர்ந்து உள்ளது. இது மட்டுமல்லாமல் இன்னமும் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கானது இன்னமும் கூட முழுவதும் புரிந்து கொள்ள முடியாத வகையிலேயே இருக்கிறது. மேலும், இதனால் ரேடியோ லீகேஜ் எனப்படும் ரேடியோ சிக்னல் கசிவானது ஏற்பட்டு அண்ட சராசரத்தில் உள்ள ஏலியன்களுக்கு நமது பூமியின் இருப்பிடத்தை பற்றி தெரியப்படுத்த வாய்ப்புகள் உண்டு.
இதற்கு முன்பு வரை இது பற்றிய ஆய்வுகள் மிகப் பெரும் அளவில் நடக்கவில்லை என்றாலும் கூட, அண்டத்தில் ஏலியன்களின் இருப்பை கண்டறிய மும்முனைப்புடன் செயல்பட்டு வரும் “SETI” என்ற அமைப்பானது தற்போது மொபைல் டவர்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகளும் கதிர்வீச்சுகளும் எவ்வாறு ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள உதவும் என்பது போன்ற ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
அதில் ஒரு ஒரு குறிப்பிட்ட ஆய்வில் தான் பால்வெளி அண்டத்தில் உள்ள மனிதர்களை விட அதிக பரிணாம வளர்ச்சியுடன் ஏதேனும் ஒரு இனம் வாழ்ந்து வரும் எனில், அவர்களும் நம்மைப் போலவே தொழில்நுட்பத்தில் வளர்ந்து இருந்தால் அவர்களுக்கு தற்போது உள்ள 5ஜி தொழில்நுட்பமானது நமது இருப்பிடத்தை தெரியப்படுத்த கூடும் என்று கூறியுள்ளனர்.
இதையும் வாசிக்க: தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள்.. ஆப்பு வைக்கும் அதிரடி உத்தரவு!
மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே பூமியிலிருந்து கசியும் ரேடியோ அலைகளின் அளவானது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆசியா கண்டம், ஜப்பான், வியட்நாம், சீனா போன்றவற்றிலிருந்து தான் அதிக அளவில் கசிவுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக நம்மை விட ரேடியோ டெலஸ்கோப்புகள் தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சி அடைந்த ஏதேனும் இனம் நமது பால்வழி அண்டத்தில் வாழும் பட்சத்தில் இந்த ரேடியோ அலை கசிவுகள் நமது இருப்பிடத்தை தெரியப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக 10 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் வேற்று கிரகவாசிகள் இந்த ரேடியோ அலை கசிவுகளின் மூலம் நமது இருப்பிடத்தை கண்டறிய முடியும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதற்கான சாத்திய கூறுகள் தற்போது குறைவாக இருந்தாலும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் ரேடியோ அலை கசிவுகளை கணக்கிட்டு பார்க்கையில் வேற்றுகிரகவாசிகளால் கண்டிப்பாக நமது இருப்பிடத்தை எளிதாக கண்டறிய முடியும் என்று அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology