ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தங்கள் 5G நெட்வொர்க்கை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளன. ஜியோ Standalone 5G நெட்ஒர்க்கை பயன்படுத்தும் அதே நேரம், ஏர்டெல் நிறுவனம் தற்போதுள்ள 4G உள்கட்டமைப்பை நம்பி non-standalone 5G சர்விஸ்களை வழங்குகிறது. 4G நெட்ஒர்க்கை விட புதிய 5G நெட்வொர்க் யூஸர்களுக்கு ஃபாஸ்ட் மற்றும் ஸ்மூத் கனெக்ட்டிவிட்டியை வழங்குகிறது. இருப்பினும் சில யூஸர்கள் இந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது தங்களது மொபைல் பேட்டரி சீக்கிரம் சார்ஜ் குறைந்து விடும் சிக்கலை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
புதிய டெக்னலாஜியான 5G உங்கள் ஸ்மார்ட் போனில் ஹை-பவர் கன்சம்ப்ஷன் மற்றும் ஹீட் ஜென்ரேஷன் காரணமாக அதிக பேட்டரியை பயன்படுத்துகிறது. மேலும் இது 4G LTE போன்ற Energy-efficient கொண்டதாக இல்லை. குறிப்பாக தற்போதுள்ள 4ஜி உள்கட்டமைப்பை நம்பியிருக்கும் நான்-ஸ்டாண்டலோன் (என்எஸ்ஏ) 5ஜி நெட்வொர்க்குகளில் பேட்டரி பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நேர்மாறாக Standalone (SA) 5G நெட்ஒர்க்ஸ் குறைவான பேட்டரியையே பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. NSA 5G சர்விஸ் ஹை-ஸ்பீட் இன்டர்நெட் கனெக்டிவிட்டியை வழங்கும் அதே வேளையில், கால்ஸ் மற்றும் மெசேஜ்கள் 4G அல்லது 3G நெட்வொர்க்குகள் மூலம் தான் இன்னும் அனுப்பப்படுகின்றன.
Read More : ஹனிமூனுக்கு கேரளா செல்ல திட்டமா..? உங்களுக்கான டாப் 10 இடங்கள்..!
நீங்கள் 5G-க்கு மாறியதன் காரணமாக பேட்டரி பிரச்சனையை சந்திக்கிறீர்களா.! பயணம் செய்யும் போது அல்லது உங்கள் டிவைஸின் பேட்டரியை சேமிக்க நினைக்கும் போது, 5G சர்விஸிலிருந்து 4G-க்கு எளிதாக மாறலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலுமே இதை செய்யலாம். அதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே...
ஆண்ட்ராய்டு யூஸர்கள் மற்றும் ஐபோன் யூஸர்கள் 5G-யில் இருந்து 4G நெட்வொர்க்கிற்கு எப்படி மாறுவது.?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Technology