முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ் அப் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 47 லட்சம் கணக்குகள் முடக்கம்.. நடந்தது என்ன?

வாட்ஸ் அப் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 47 லட்சம் கணக்குகள் முடக்கம்.. நடந்தது என்ன?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whatsapp: விதிகள் பின்பற்றாத வாட்ஸ் அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் 47 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் தகவல் பரிமாற்றத்தில் முதன்மையாக வாட்ஸ் அப் செயலி பயன்பாடு இருந்து வருகிறது. மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ் அப் உபயோகத்திற்கு என்று சில கட்டுப்பாடுகளை வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விதிமுறைகளை மீறும் பயனர்களில் கணக்குகள் நீக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிப்ரவரி மாதம் 45 லட்சம் கணக்குகளும், ஜனவரி மாதம் 29 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மார்ச் 1-ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 47,15,906 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : ஏசி ஓடிக்கொண்டே இருந்தாலும் EB பில் கம்மியா வரணுமா? சிம்பிளான சில டிப்ஸ்!

வாட்ஸ் அப்பின் விதிகளைப் பின்பற்றாததால் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், மார்ச் மாதத்தில் கணக்குகளை முடக்கக்கோரி 4,720 பயனர்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டதாகவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

top videos
    First published:

    Tags: Meta, Technology, WhatsApp