முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆபாச வீடியோக்களை விற்று வருமானம்... தஞ்சை இளைஞர் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்..!

ஆபாச வீடியோக்களை விற்று வருமானம்... தஞ்சை இளைஞர் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்..!

கைது செய்யப்பட்ட இளைஞர்

கைது செய்யப்பட்ட இளைஞர்

ஆராய்ச்சி மாணவர் விக்டரை சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விகடர் ஜேம்ஸ் ராஜா (32).  இவர் பிரதமரை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்து பிரதமர் அலுவலகங்களுக்கு மெயில் அனுப்பியதாக கூறி கடந்த 15ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்து செய்யப்பட்டார்.

இவரை மூன்று நாட்கள் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட வந்த விக்டர் ஜேம்ஸ், தனது வீட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். அங்கு வரும் சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இவரின் வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிக்க :  பிரதமர் மோடி குறித்து மின்னஞ்சலில் அவதூறு கருத்து.. தஞ்சாவூர் இளைஞரை கைது செய்தது சிபிஐ

இதுபோன்று, இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆபாச படம் எடுக்கப்பட்டதாக இண்டர்போல் போலீசார், சிபிஐ-க்கு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் 21 இடங்களில் விசாரணை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஆராய்ச்சி மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், போக்சோ சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

First published:

Tags: CBI, PM Narendra Modi, Porn websites, Thanjavur