முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தங்கும் விடுதி முதல் விருது வரை... பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

தங்கும் விடுதி முதல் விருது வரை... பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்றைய நிகழ்ச்சி பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண்களுக்கான விழா என்று கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் இணைந்ததன் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நேரு உள் விளையாடு அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். முற்றிலும் பெண் காவலர்கள், அதிகாரிகள் மட்டுமே பங்கேற்ற கவாத்து, இசை வாத்தியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

காவல் துறையில் பெண் காவலர்களின் செயல்பாடு குறித்து வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து பெண் காவலர்களின் சாகச நிகழ்ச்சியை முதலமைச்சர் கண்டு ரசித்தார். அதன்பின், தமிழ்நாடு காவல் துறையில் ‘அவள்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண்களுக்கான விழா என்றும் கூறினார். மேலும், பெண் காவலர்களுக்கு கருணாநிதி பெயரில் விருது வழங்கப்படும். ரோல்கால் எனும் காவல் அணிவகுப்பு இனி காலை 7 மணிக்கு பதிலாக 8 மணி என மாற்றப்படும். சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி விரைவில் அமைக்கப்படும். பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச்சுடும் போட்டி தனியாக நடத்தப்பட்டு விருது வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

First published:

Tags: Chennai, CM MK Stalin, Tamilnadu police