முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி... குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்த முதல்வர்..

பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி... குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்த முதல்வர்..

பட்டாசு ஆலை விபத்து

பட்டாசு ஆலை விபத்து

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் ஒருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Vellore, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குப்பட்டியில் கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போலத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, பேக்கிங் அட்டைப் பெட்டிகள் வைக்கும் அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்டு தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தீ பரவிச் சேதமடைந்தது.

Also Read : ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் வேண்டும் - தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

top videos

    இந்த விபத்தின் போது அறையிலிருந்த கணக்காளர் ஜெயசித்ரா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக, ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஜெயசித்ராவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    First published:

    Tags: Accident, Crackers, Vellore