முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக ஐடி விங்க்.. 3முறை எம்எல்ஏ..! யார் இந்த டி.ஆர்.பி. ராஜா?

திமுக ஐடி விங்க்.. 3முறை எம்எல்ஏ..! யார் இந்த டி.ஆர்.பி. ராஜா?

டி.ஆர்.பி. ராஜா

டி.ஆர்.பி. ராஜா

TRB Raja தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பொறுப்பேற்கும் டிஆர்பி ராஜாவின் பின்னணி குறித்து பார்க்கலாம்..

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்கும் டி.ஆர்.பி ராஜா, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார்.3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற டி.ஆர்.பி ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக உள்ளார்.

1976ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்த டி.ஆர்.பி. ராஜா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் பயின்றவர்.சென்னை லயோலா கல்லூரியில் இளநிலைபடிப்பும், சென்னை பக்லைக்கழகத்தில் உளவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றுள்ள டிஆர்பி ராஜா. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் `வாக்காளர்கள் மனநிலை’குறித்து ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

இதையும் படிங்க: பர்சனல் லோன் வாங்க திட்டமா... அப்படினா நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய கட்டணங்கள் இங்கே...

2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர், தமிழ்நாடு பொதுக்கணக்கு குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார்.  2021 - 22 ஆம் ஆண்டு வரை திமுக வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணியின் மாநில செயலாளராகவும், 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்துள்ளார் டி.ஆர்.பி.ராஜா.

top videos

    தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த நிலையில், டி.ஆர்.பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    First published:

    Tags: TN Cabinet, TRB