முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Video | பணம் செலவு செய்ய போறீங்களா...? இதெல்லாம் கவனத்தில் வச்சுக்கோங்க..!

Video | பணம் செலவு செய்ய போறீங்களா...? இதெல்லாம் கவனத்தில் வச்சுக்கோங்க..!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

பார்த்த உடன் விலை குறைவாக உள்ளது என ஒரு பொருளை வாங்காமல், தரமான பொருளை வாங்குவது நல்லது.

  • Last Updated :
  • tamil nadu, India

10 ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த நினைத்து, 100 ரூபாய் கூடுதலாக செலவு செய்வது எல்லார் வாழ்விலும் நடப்பது.. செலவு செய்யும் போது சில விஷயங்களை தவிர்த்தால் இந்த மாதிரி நஷ்டம் வராது.. முதலில் பொருள்களின் பராமரிப்பு செலவைத் தவிர்ப்பது, இப்போ கையில் பணம் இல்லை, வண்டியை ஒரு மாதம் கழித்து சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று விட்டு, ஒரு லட்சம் கிலோமீட்டர் ஓடக்கூடிய வட்டியை 50 ஆயிரம் கிலோமிட்டர்களிலே மாற்ற வேண்டிய நிலை வரும்.

சில நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த நினைத்து, பல ஆயிரம் செலவு செய்ய வேண்டிய நிலையில் சிக்கிவிடுவோம்... அடுத்து, விலை குறைவு என தரமில்லாத பொருள்களை வாங்குவது. ஒரு பொருளை வாங்கும் போது, சற்று பொறுத்து இருந்து, நல்ல தரமான பொருளை வாங்குவது முக்கியம்.

காரணம், முக்கியமான நேரத்தில் அந்த பொருள் பழுது ஆகிவிட்டால், அதனால் ஏற்படும் நஷ்டம் பெரிய அளவில் கூட இருக்கலாம். எனவே பார்த்த உடன் விலை குறைவாக உள்ளது என ஒரு பொருளை வாங்காமல், தரமான பொருளை வாங்கவும். அதற்கு அடுத்து, தேவை இல்லாத பொருளை தள்ளுபடி விலை என்று வாங்குவது நாம் செய்யும் தவறுகளில் முக்கியமானது...

மேலும் பார்க்க... 

' isDesktop="true" id="979750" youtubeid="LZtGfFhgygw" category="tamil-nadu">

top videos

    தேவை இல்லாத ஒரு பொருளை நீங்கள் வாங்கினால், தேவையான ஒரு பொருளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்று, பேப்பர் போட்டு, பணம் சேர்த்து உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் warren buffet சொன்னது. இந்த செலவு தேவையா என்ன ஒரு நிமிடம் யோசித்தால், பல செலவுகளை தவிர்க்கலாம்..

    First published:

    Tags: Money