தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு, பேரவை விதிகளில் ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்தி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சாசனப் பதவிகளான குடியரசுத் தலைவர், ஆளுநர் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பது தொடர்பாக சில விதிகள் உள்ளன. அதன்படி, விதி எண் 92ன் ஏழாவது பிரிவில், உறுப்பினர் ஒருவர் பேசுகையில், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசக் கூடாது. இந்த நிலையில், பேரவையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை கொண்டு வர பேரவை விதிகள் 92 மற்றும் 287-ல் ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து, பேரவை முன்னவரான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியே செல்ல முற்பட்ட நிலையில் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜகவைச் சேர்ந்த காந்தி, சரஸ்வதி ஆகியோர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை பேரவைத் தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் எவரேனும் முன்மொழியலாம். கூட்டத்திற்கு வந்திருந்து வாக்களிக்கும் (3/4 of the total number of members present and voting at the meeting) மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினரின் ஆதரவுடன் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு எண்ணிக்கணிக்கும் முறையில் சபாநாயகர், உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கையை கணக்கிட உத்தரவிட்டார். இதற்காக சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முன்னதாகவே வெளிநடப்பு செய்த நிலையில், வாக்கெடுப்பில் 146 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 144 பேர் ஆதரவு அளித்த நிலையில்,பாஜக-வைச் சேர்ந்த எம்.ஆர் காந்தி மற்றும் சி. சரஸ்வதி ஆகியோர் மட்டுமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து பின்பு வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து ஆளுநர் தொடர்பான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Governor, TN Assembly