முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அண்ணாமலை மீது முதல்வர் அவதூறு வழக்கு தொடர்ந்ததை வரவேற்கிறேன்.. ஹெச்.ராஜா பேட்டி..!

அண்ணாமலை மீது முதல்வர் அவதூறு வழக்கு தொடர்ந்ததை வரவேற்கிறேன்.. ஹெச்.ராஜா பேட்டி..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

முதலமைச்சர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கனவே 5 நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள் என ஹெச்.ராஜா பேட்டி.

  • Last Updated :
  • Tamil Nadu |

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் அவதூறு வழக்கை பதிவு செய்திருப்பதை வரவேற்பதாக  ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில்,  “அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன்., அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர், ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல மாட்டார்.  முதலமைச்சர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கனவே 5 நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள்.

எனவே முதலமைச்சரின் இந்த வழக்கு தொடுத்திருக்கும் நடவடிக்கையின் மூலம் அவர் மீது வைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றச்சாட்டு விசாரணை  வரை அவரே வழிவகை  செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.

கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,  “யார் என்ன சொன்னாலும், பாஜக மீண்டும் அங்கு ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி அமித்ஷா ஜெ.பி.நட்டா ஆகியோரின் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அங்கே களத்தில் எதிரில் யாரும் இல்லாத சூழல்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், திராவிட மாடல் குறித்த ஆளுநரின் விமர்சன கருத்துக்கு பதிலளித்து பேசிய அவர்,  திராவிட மாடல் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா? திராவிடர் கழகம் உருவாகி 100 ஆண்டுகள் இருக்கும். இதுவரை அந்த மாடலை ஸ்டாலின் சொல்வதற்கு முன் யாரும் சொன்னது இல்லை என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கVideo | “சட்டமன்றத்திற்கு லீடர் நான்தான்... ஆளுநரை நான்தான் கண்காணிக்க வேண்டும்” - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. அதே வேளையில் கூட்டணியில் வேறு யார் யாரெல்லாம் வருவார்கள் என்பதை அந்த கால சூழலுக்கு ஏற்று தான் முடிவு செய்ய முடியும். தேர்தல் களத்தில் மோடி ஒருவரே இருக்கிறார் எதிரில் யாரும் இல்லை என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, HRaja