முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை... வானிலை மையம் அலெர்ட்

இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை... வானிலை மையம் அலெர்ட்

மாதிரி படம்

மாதிரி படம்

தென் இந்திய பகுதிகளின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் இன்று 6 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 29) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மார்ச் 30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Heavy rain, Rain updates, Weather News in Tamil