முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெயிலுக்கு ரெஸ்ட்.. வரப்போகுது கனமழை.. வானிலை அலெர்ட் இதோ!

வெயிலுக்கு ரெஸ்ட்.. வரப்போகுது கனமழை.. வானிலை அலெர்ட் இதோ!

மழை

மழை

Weather update : வெயில் வாட்டி வதைக்கப்பட்ட நிலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வுமையம் அலெர்ட் கொடுத்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம், ஏப்ரல் 2 முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

இதேபோல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம், மேலும், சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாக கூடும் என தெரிவித்துள்ளது

top videos
    First published:

    Tags: Chennai rains