முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் ஈரோடு கரூரில் சதமடித்த கோடை வெயில்..!

தமிழகத்தில் ஈரோடு கரூரில் சதமடித்த கோடை வெயில்..!

வெயில்

வெயில்

தமிழகத்தில் மேலும் சில நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தகவல்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி, வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 101.1 டிகிரியும், கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவானது.

வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கோவை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியது.குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 63 டிகிரியும், குன்னூரில் 73 டிகிரியும் பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  வடக்கு மற்றும் தென் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

top videos

    நாளை முதல் 13-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Erode, Karur, Weather News in Tamil