முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘அடுத்தடுத்த நாட்களில் வட தமிழ்நாட்டில் அதிகமான வெப்பநிலை உணரப்படும்’ - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல்

‘அடுத்தடுத்த நாட்களில் வட தமிழ்நாட்டில் அதிகமான வெப்பநிலை உணரப்படும்’ - தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல்

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என தகவல்

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என தகவல்

சென்னையை பொறுத்த வரை இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகமாக உணரப்படுவதற்கு பகல் நேர வெப்பநிலை கூடுதலாக இருப்பது முக்கிய காரணம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

அடுத்து வரும் நாட்களில் வட தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலை உணரப்படும் என்றுதனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது- தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 106 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது, இதற்கு மிக முக்கிய காரணம் அண்மையில் உருவான மோக்கா புயல் என்று தெரியவந்துள்ளது. கடற்பரப்பிலும் நிலப்பரப்பிலும் இருந்த வீரப்பதத்தை இந்த புயல் முற்றிலமாக இழுத்துச் சென்றது வெப்பநிலை மெல்ல மெல்ல உயர காரணம்.

சென்னையை பொறுத்த வரை இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகமாக உணரப்படுவதற்கு பகல் நேர வெப்பநிலை கூடுதலாக இருப்பது முக்கிய காரணம். அதே நேரத்தில் கடலில் இருக்கக்கூடிய குளுமை தன்மை நிலப்பரப்புக்கு வந்தடைவதற்கு காலதாமதம் ஆவதாலும் இந்த நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை வட தமிழ்நாட்டில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே இருக்கும். அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்து காணப்படும். மதுரை விருதுநகர் சிவகங்கை ஆசிய மாவட்ட வெப்ப நிலை அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Summer Heat, Weather News in Tamil