முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு சுட்டெரிக்கப்போகும் வெயில் - எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு சுட்டெரிக்கப்போகும் வெயில் - எங்கெல்லாம் தெரியுமா?

சுட்டெரிக்கும் வெயில்

சுட்டெரிக்கும் வெயில்

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 20-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

16.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

16.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

20.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : 

16.04.2023 மற்றும் 17.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

top videos

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Rain Update, Weather News in Tamil