முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை... முழு விவரம்..!

சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை... முழு விவரம்..!

முதல்வர் சந்திப்பு

முதல்வர் சந்திப்பு

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்ய ஆர்வமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிங்கப்பூரின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்பது நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், முதலாவதாக சிங்கப்பூருக்கு முதலமைச்சர் நேற்று சென்றடைந்தார். அங்கு அவர் இன்று காலை சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தில்கன் பிள்ளை சந்திரசேகரா-வை சந்தித்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள காற்றாலைகள் அளவை அதிகரிக்கவும், புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் முன்வருமாறு டமாசெக் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார்.

மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதலமைச்சரிடம் டமாசெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

அதன்பின் செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிம்யன் வாங்க் உடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எரிசக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளில் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இறுதியாக கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் தாஸ் குப்தாவை சந்தித்து பேசினார். அப்போது, சிங்கப்பூரில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள சிங்கப்பூர் அறிவியல் பூங்கா போன்ற பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளதால் அவற்றில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க... அரசு பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் ரத்து... அரசாணை வெளியிட்ட தமிழக அரசு... முழு விவரம்...!

top videos

    இந்த சந்திப்பின் போது செம்ப்கார்ப் மற்றும் கேப்பிட்டா லேண்ட் நிறுவன அதிகாரிகள், தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு தங்களது நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Business, CM MK Stalin, Singapore