முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வாங்காதப் பொருட்களுக்கு பில்... ரேசன் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..!

வாங்காதப் பொருட்களுக்கு பில்... ரேசன் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..!

ரேசன் கடை

ரேசன் கடை

ரேசன் கடை ஊழியர்கள் மேல் புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரேசன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டதாகப் புகார் வந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய PoS எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் உள்ள நபர்களில் ஒருவரது கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் போது குடும்ப அட்டைதாரர்கள் கேட்கும் பொருள்களுக்கு மட்டுமே பில் போடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே பலமுறை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றுக்கையில், வாங்காத பொருட்களை வாங்கியது போல் பில் போடப்பட்டதாகக் குறுஞ்செய்தி பெறப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தால், கடை ஊழியர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read : காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: கர்நாடக அரசுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கடிதம்

top videos

    மேலும், இதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது போலி பில் போடப்பட்டதைக் கண்டறியப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Ration card, Ration Shop