முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாலை விதிகளை மீறினால் 15 நாட்களுக்குள் அபராதம்... அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!

சாலை விதிகளை மீறினால் 15 நாட்களுக்குள் அபராதம்... அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!

போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து காவல்துறை

Traffic rules | சாலை விதிகளை மீறினால் 15 நாட்களுக்குள் அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது.

அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவலர்கள், தங்களது உடலில் கேமராவை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும்,

போக்குவரத்து காவல் வாகனங்களின் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம், வாகனங்களில் உள்ள எடையை அறியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணித்து அபராதம் விதிக்க புதிய நடைமுறை வழிவகை செய்கிறது.

' isDesktop="true" id="979672" youtubeid="it9kkEpOcUQ" category="tamil-nadu">

மேலும் படிக்க... சிங்கங்களை விரட்டி விரட்டி கொன்ற பொதுமக்கள்...!

மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத் தொகையை செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Road Safety, Traffic Rules, Transport