விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்க தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 66 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம், 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்த 44 நபர்களை ஒரே நாளில் காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 109 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் மற்றும் 450 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க; "கள்ளசாராயம் குடிப்பதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படும்": மருத்துவர் நிருபன் சக்கரவத்தி
இந்நிலையில், கள்ளச் சாராய விற்பனையை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வனப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அவர் உத்தரவிட்டுள்ளார். கள்ளச் சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருளான மெத்தனால் கள்ளத்தனமாக விற்கப்படுகிறதா? என்பதையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றானர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol, Death, Viluppuram S22p13