தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகர் விஜய் அரசியலுக்கான முயற்சி செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். விஜய் வந்தால் மேலும் வலிமையாக இருக்கும். நாங்கள் ஒரு பேரியக்கமாக இருப்பதால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டியதில்லை. அவர் தான் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “மருத்துவத்தையும் கல்வியையும் உலக தரத்துக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. அரசு பள்ளிகளில் கல்வி இலவசம் என வாதாடும் நபர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். நாங்கள் விரும்புவது ஆள் மாற்றமோ, ஆட்சி மாற்றமோ இல்லை. மொத்த கட்டமைப்பை மாற்றி அரசியல் மாற்றத்தை கொடுக்க விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிக்க : கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு- முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு..
முத்துராமலிங்கத் தேவர் தனது சொத்துகளை ஏழைகளுக்கு கொடுத்தார். அவரை நாம் எந்த குறியீட்டோடு பார்க்கிறோம்? பெரியார் தனது சொத்துகளை பார்த்துக் கொள்ள 70 வயதில் வாரிசு தேடினார். தனது சொத்துக்களை தனக்கு பிறகு கவனிக்க, ஆட்களை தேடியபோதே அவர் போராளி அல்ல. முதலாளி ஆகி விடுகிறார் என கூறினார்.
மேலும் சீமான் சங் பரிவாரின் குரலாக ஒலிப்பதாக திருமாவளவன் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அண்ணனுக்கு நன்றி" என்று பதிலளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Naam Tamilar katchi, Periyar, Seeman, Tamil Nadu