முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நேரடி அரசியலுக்கு வருகிறாரா விஜய்..? வெளிவந்த தகவல்..

நேரடி அரசியலுக்கு வருகிறாரா விஜய்..? வெளிவந்த தகவல்..

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.  மேலும் அந்த இயக்கத்திற்கு புஸ்ஸி என்.ஆனந்தை பொதுச்செயலாளராகவும் நியமித்திருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.  அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி அடைந்தனர்.

அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் இந்த விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த பொதுச் செயலாளர் புஸ்ஸ்.என்.ஆனந்துக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கான ஆலோசனை கூட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டங்களில் நடைபெற இருக்கின்றன. விஜய் மக்கள் இயக்கத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்க: ஆளுநர் விவகாரம் : நாளை பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

top videos

    அத்துடன் விஜய் மக்கள் இயக்கத்திற்காக செயல்படும் விவசாய அணி, மகளிர் அணி, இளைஞரணி ஆகியவ நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    First published:

    Tags: Actor Vijay