முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேங்கைவயல் விவகாரம்... மே 6ஆம் தேதி விசாரணை தொடங்குகிறது ஆணையம்...!

வேங்கைவயல் விவகாரம்... மே 6ஆம் தேதி விசாரணை தொடங்குகிறது ஆணையம்...!

வேங்கைவயல் விவகாரம்

வேங்கைவயல் விவகாரம்

ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  • Last Updated :
  • Pudukkottai, India

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் மே 6-ம் தேதி நேரில் விசாரணை நடத்த உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், டி.என்.ஏ பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை முடிந்து விட்ட நிலையில், எட்டு பேர் பரிசோதனைக்கு வர முடியாது என்று மறுத்து விட்டனர்.

மேலும் இரண்டாவது கட்டமாக புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.

Also Read : தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்... கனிமொழிக்கு அண்ணாமலை பதில்...!

அதன்படி, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் மே 6 ஆம் தேதி நேரில் விசாரணையை தொடங்க உள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தந்துள்ளது.

First published:

Tags: Crime News, High court, Pudukottai