முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஏஓக்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் கடிதம்

விஏஓக்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஏஓக்களுக்கு கைத் துப்பாக்கி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வி.ஏ.ஓக்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலகர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதற்கும், அரசு வேலை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூத்துக்குடி நிகழ்வு போன்றே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் தாலுகாவிலுள்ள விஏஓ வினோத் குமாரை மணல் கடத்தல் கும்பல் வெட்டிக் கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

இத்தகைய சம்பவங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சத்தோடும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளனர். இருப்பினும் நேர்மையாக வேலை செய்துவருகிறோம். கிராம நிர்வாக அலுவலர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ஒரு தற்காப்பு பயிற்சி உடனடியாக வழங்க வேண்டும்.

top videos

    தேவைப்படும் பட்சத்தில் கைத் துப்பாக்கி வழங்கவும் அரசு உடனடியாக பரிசீலனை செய்யவேண்டும். புகார் அளித்தால் அரசு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, பணி கிராமங்களில் தங்குதல் வேண்டும் என்ற விதியைத் தளர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Tamil Nadu