முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "சோறு வேண்டுமா கரண்ட் வேண்டுமா" சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் பேச்சு....

"சோறு வேண்டுமா கரண்ட் வேண்டுமா" சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் பேச்சு....

மாதிரி படம்

மாதிரி படம்

vanathi srinivasan | எந்த ஒரு அரசாக இருந்தாலும் உள்ள இருக்கிற வருவாய்த்துறை அதிகாரிகளும் ஒப்புதல் கிடைத்த பிறகு தான் இது போன்ற சட்டங்களுக்கு அனுமதி வழங்குவார்கள் என வானதி சீனிவாசன் பேச்சு

  • Last Updated :
  • Tamil Nadu, India

நிலக்கரி எடுக்கும் திட்டத்திலிருந்து டெல்டா மாவட்டத்திற்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு பாரதிய ஜனதா சார்பில் கடிதம் எழுதி இருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் அதற்கு எதிராக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நிச்சயமாக ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என கேட்டால் சோறு தான் வேண்டும்.டெல்டா பகுதி விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பது அனைவரும் அறிந்ததே இதனால் தான் தமிழக அரசு அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறது.

இதையும் படிங்க: நிலக்கரி சுரங்க அறிவிப்பு - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா

top videos

    எந்த ஒரு அரசாக இருந்தாலும் உள்ள இருக்கிற வருவாய்த்துறை அதிகாரிகளும் ஒப்புதல் கிடைத்த பிறகு தான் இது போன்ற சட்டங்களுக்கு அனுமதி வழங்குவார்கள் அப்படி இருக்கும்போது ஏன் மத்திய அரசுக்கு முன்கூட்டியே வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. தற்போது மத்திய அரசு நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் வழங்கி இருப்பதில் இருந்து இப்பகுதிக்கு விலக்களிக்க வேண்டும் வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Cauvery Delta, Coal, Vanathi srinivasan