முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வைக்கம் நூற்றாண்டு விழா... இன்று கேரளா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

வைக்கம் நூற்றாண்டு விழா... இன்று கேரளா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி, சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தை பெரியார் முன்னின்று நடத்தியதால், அவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கேரளா அரசு விமரிசையாக கொண்டாட உள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் கொச்சின் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக குமரகம் செல்லும் மு.க.ஸ்டாலின், தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார்.இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு விடுதியில் இருந்து முதலமைச்சர் வைக்கம் செல்கிறார்.

அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் இரண்டு மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை முடித்து விட்டு சாலை மார்க்கமாக கொச்சின் செல்லும் முதலமைச்சர், தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார்.

நாளை காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார். இரு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி என்பதால், காவல்துறையினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin