முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை கொரட்டூர் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்ட அமைச்சர் எல்.முருகன்

சென்னை கொரட்டூர் ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொண்ட அமைச்சர் எல்.முருகன்

எல்,முருகன்

எல்,முருகன்

காவல்துறை சார்பில் பேரணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

தமிழ்நாட்டின்‌ 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், இன்று மாலை சீருடை அணிந்து பேரணியில் ஈடுபட்டனர். அதன்படி, கொரட்டூரில் இன்று மாலை 4.15 மணி அளவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தனியார் பள்ளியில் இருந்து தொடங்கி நடைபெற்றது.‌  

இதில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் கொடிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு பேரணி தொடங்கியது. இந்த பேரணியையொட்டி 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பேரணி செல்லும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே நேரத்தில் ட்ரோன் பறக்க விடப்பட்டும், உயரமான கட்டிடங்களில் நின்று கொண்டும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணியானது அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொரட்டூர் மத்திய நிழற்சாலையில் இருந்து தொடங்கி, கிழக்கு நிழற்சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கொரட்டூர் மத்திய நிழற்சாலைக்கு வந்தடைந்தது.

கட்டாயம் வாசிக்க:  தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தொடங்கிய ஆர்எஸ்எஸ் பேரணி- காவல்துறை தீவிர பாதுகாப்பு

சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தூரம் இந்த பேரணி நடைபெற்று தனியார் பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரணி சென்ற‌ இடங்களில் வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். காவல்துறை சார்பில் பேரணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

First published:

Tags: L Murugan, RSS