முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... அலெர்ட் செய்த மத்திய அரசு!

தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... அலெர்ட் செய்த மத்திய அரசு!

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

India Corona | உலக அளவிலான பாதிப்புடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு சதவிகிதம் பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று வேகமெடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 2 ஆவது வாரத்தில், சராசரியாக நாள்தோறும் 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நாள்தோறும் சராசரியாக 966 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார். குறிப்பாக மகாராஷ்ட்ரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவு பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

top videos

    கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருப்பதாக ராஜேஷ் பூஷன் கூறினார். உலக அளவிலான பாதிப்புடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு சதவிகிதம் பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் தற்போது பரவும் கொரோனா, ஒமைக்ரானின் திரிபு வைரஸ் என்று ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Corona, Covid-19, Tamilnadu