முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஐடி ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது... உதயநிதி ஸ்டாலின்

ஐடி ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது... உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வருமான வரித்துறையைக் கொண்டு தி.மு.கவை அச்சுறுத்த முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுக தலைமை முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்தசூழலில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்திலும், சென்னை நீலாங்கரையில் உள்ள அந்நிறுவன இயக்குநர் பாலாவின் வீட்டிலும் அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். , சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ மோகன் வீட்டிலும், அவரது மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அவர்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தவர்கள்.

தி.மு.கவை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக அரசியல் களத்தில் பேசப்பட்டது. இந்தநிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘வருமான வரித்துறை சோதனை நடத்துவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தகர்த்தெறிந்துவிட்டு பணியாற்றி வருகிறோம்.

வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்தாரா இபிஎஸ்? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

top videos

    ஐ.டி.ரெய்டுகளுக்கெல்லாம் அஞ்சமுடியாது. திமுகவை யாரும் வாழ்த்துவது இல்லை, குற்றச்சாட்டு மட்டுமே கூறி வருவதாகவும் உதயநிதி குறிப்பிட்டார்.

    First published:

    Tags: DMK, Udhayanithi Satlin