முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் மு.க.ஸ்டாலின் , தோனி இருவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் - உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் , தோனி இருவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் - உதயநிதி ஸ்டாலின்

நிகழ்ச்சியில்

நிகழ்ச்சியில்

udhayanidhi stalin | தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு கட்டமைப்பு இருந்தாலும் அதனை மேம்படுத்த இந்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டம் உதவும் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை.

  • Last Updated :
  • Chennai, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோனி இருவருமே தங்கள் உழைப்பால் வளர்ந்தவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான இலட்சினை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது முதலமைச்சர் கோப்பைக்கான சிறப்புப் பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இலட்சினைக்கு வீரன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தோனி துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் விளம்பர தூதராக தோனி உள்ள நிலையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதால் துறையை தன்னிறைவு பெரும் நோக்கில் இந்த அறக்கட்டளை துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தை விளையாட்டின் தலைநகரமாக உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் : கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்ப்பு

 தமிழகத்தில் விளையாட்டுத்துறை உயர்வதற்கு இந்த அறக்கட்டளை மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு கட்டமைப்பு இருந்தாலும் அதனை மேம்படுத்த இந்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டம் உதவும் என்றார்.

top videos

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோனி இருவருமே தங்கள் உழைப்பால் வளர்ந்த நபர்கள் என்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டத்திற்கு 23.50 கோடி ரூபாய் தற்போது வரை கிடைத்துள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் வழங்கிய முதலமைச்சர் விளையாட்டுத் துறைக்கும் வழங்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    First published:

    Tags: CM MK Stalin, MS Dhoni, Udhayanithi Satlin