தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யபட்டுள்ளனர். முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இதுவரை இருந்த உதயசந்திரன், நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் உள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த கோபால் தமிழக விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும், இப்பொறுப்பை வகித்து வந்த செந்தில்குமார் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித் துறைச் செயலர் க.மணிவாசன் சுற்றுலாத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பொதுப் பணித் துறை செயலாளர் ஆகியுள்ளார்.
பொதுத் துறை செயலாளராக இருந்த ஜெகன்னாதன் உணவுத் துறை செயலாளராகவும், பள்ளி கல்வித் துறை ஆணையராக இருந்த நந்தகுமார், மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுத் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamilnadu government