முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிதம்பரம் தீட்சிதர் குடும்ப சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை?- ஆளுநர் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு

சிதம்பரம் தீட்சிதர் குடும்ப சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை?- ஆளுநர் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு

கடந்த ஆண்டு தீட்சிதர் கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய புகைப்படம்

கடந்த ஆண்டு தீட்சிதர் கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய புகைப்படம்

Two Finger Virginity Test Issue | சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் ஆளுநரின் பேட்டி அடிப்படையில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Cuddalore, India

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அண்மையில் பேட்டியளித்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறை அதிகாரிகள், தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால் அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை என்றும் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தடை செய்யப்பட்ட இரண்டு விரல் பரிசோதனை என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...

இதனால், அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து முதலமைச்சருக்கு, தான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாகவும் ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் ஆளுநரின் பேட்டி அடிப்படையில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றி விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Cuddalore